வேலூர் மாவட்டத்தில் இந்த தேர்வை 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகள் தேர்வு எழுதினர். 80 மையங்களில் நடந்த இந்த தேர்வு பணியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். இந்த நிலையில் பிளஸ்-2 விடைத்தாள் திருத்தும் பணி வேலூர் மாவட்டத்தில் தொடங்கியது.
இதற்காக சாய்நாதபுரம் கிருஷ்ணசாமி முதலியார் மேல்நிலைப் பள்ளி, குடியாத்தம் சேத்துவாண்டை சரஸ்வதி வித்யாலயா மெட்ரிக் பள்ளி ஆகிய 2 மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன. இந்தப்பணியில் ஒவ்வொரு மையங்களிலும் முதன்மை தேர்வாளர்கள், கூர்ந்தாய்வாளர்கள், உதவி தேர்வு அலுவலர்கள், அட்டவணையாளர்கள், மதிப்பெண் சரிபார்க்கும் அலுவலர்கள் உள்ளிட்ட 800-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள், அலுவலர்கள் இந்த பணியில் ஈடுபட்டுள்ளனர்.
விடைத்தாள் திருத்தும் பணி வருகிற 17-ந் தேதி வரை நடைபெற உள்ளது. அதைத்தொடர்ந்து 19-ம் தேதி முதல் பிளஸ்-1 தேர்வுக்கான விடைத்தாள் திருத்தும் பணி தொடங்குகிறது.