திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் ஒன்றியத்திற்குட்பட்ட குப்பனத்தம் அணையிலிருந்து விவசாய பாசனத்திற்காக தமிழ்நாடு துணை சபாநாயகர் கு. பிச்சாண்டி தண்ணீர் திறந்து வைத்தார். செங்கம் சட்டமன்ற உறுப்பினர் மு. பெ. கிரிமாநில மருத்துவரணி துணை தலைவர் எ. வ. வே. கம்பன் திருவண்ணாமலை நாடாளுமன்ற உறுப்பினர் சி.என். அண்ணாதுரை, கலசப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் பெ. சு. தி. சரவணன் ஆகியோர் முன்னிலையில், திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் தர்பகராஜ் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், ஒன்றிய கழக செயலாளர்கள் செந்தில்குமார், ஏழுமலை, மனோகரன், சிவ சேமன் மற்றும் அரசு அலுவலர்கள், நகர நிர்வாகிகள், ஒன்றிய நிர்வாகிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள் உள்ளிட்ட கழக நிர்வாகிகள், பல்வேறு அணிகளை சேர்ந்த மாவட்ட, ஒன்றிய, அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள் என பலர் உடன் இருந்தனர்.