கலசப்பாக்கம்: தார் சாலை அமைப்பதற்கான பூமி பூஜை

67பார்த்தது
கலசப்பாக்கம்: தார் சாலை அமைப்பதற்கான பூமி பூஜை
திருவண்ணாமலை மாவட்டம், கலசப்பாக்கம் தொகுதிக்கு உட்பட்ட புதுப்பாளையம் ஒன்றியம் கல்பெயர் ஊராட்சியில் இருந்து தாமரைப்பாக்கம் செல்லும் சாலை வரை புதிய தார் சாலை அமைக்கும் பணிக்கு கலசப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினரும், தலைமைச் செயற்குழு உறுப்பினருமான. பெ. சு. தி. சரவணன் பூமி பூஜை செய்து தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் புதுப்பாளையம் கிழக்கு ஒன்றிய செயலாளர் ஆறுமுகம், பொதுக்குழு உறுப்பினர் இளங்கோவன், மனோகரன், உள்ளாட்சி பிரதிநிதிகள், திமுக கட்சி நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி