திருவண்ணாமலையில் தற்காலிக வீடுகள், அமைச்சர் ஆய்வு

78பார்த்தது
திருவண்ணாமலையில் மண்சரிவினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு தற்காலிக வீடுகள் கட்டித்தரும் பணியை நேற்று பொதுப்பணித்துறை ஆய்வு செய்தார். அதையொட்டி, திருவண்ணாமலை ஒன்றியம், நல்லவன்பாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட சமுத்திரம் பகுதியில் 20 தற்காலிக வீடுகள் கட்டப்படுவதை பார்வையிட்டார்.

அதைத்தொடர்ந்து, பொதுப்பணித்துறை அமைச்சர் எ. வ. வேலு அளித்த பேட்டியில் தெரிவித்ததாவது: திருவண்ணாமலையில் பெஞ்சல் புயலின்போது பெய்த பெருமழையால், மலை குளர்ச்சி அடைந்து மண் சரிவு ஏற்பட்டு பாறை உருண்டு ஒரு வீட்டின் மீது மோதியது. அதனால், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் இயற்கை எய்தினர். அதையொட்டி, அங்குள்ள குடும்பத்தினர் பயத்தினால் அந்த பகுதியில் குடியிருக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, தங்களுக்கு மாற்று இடம் வழங்க வேண்டும் என என்னிடம் கோரிக்கை வைத்தனர். எனவே, தற்காலிகமாக அவர்களை தங்க வைக்கலாம் என திட்டமிட்டோம். நிரந்தரமாக வீடு கட்டி அவர்களுக்கு தீர்வு காண்பது தொடர்பாக, முதல்வரின் கவனத்துக்கு கொண்டு சென்று உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

தற்போது, வஉசி நகர் பகுதியில் 20 குடும்பங்கள் ஆபத்தான சூழ்நிலையில் உள்ளன. எனவே, வேறொரு இடத்தில் வாடகை வைத்திருக்கிறோம். மேலும், அரசுக்கு சொந்தமான இடத்தில் தற்காலிகமாக ஷெட் அமைத்து 20 வீடுகள் அமைக்கும் பணி தற்போது நடந்து வருகிறது என்று கூறினார்.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி