பீகார் மாநிலம் பெகுசராய்யில் உள்ள நீதிமன்றத்தில், நிலம் விவகாரம் தொடர்பாக மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் வாதாடினார். அவர் கூறியதாவது, 2014ஆம் ஆண்டு பாட்னா உயர் நீதிமன்றம் தங்களுக்கு சாதகமாக தீர்ப்பு வழங்கிய போதிலும், மாவட்ட நிர்வாகம் நிலத்தை கையகப்படுத்த தவறிவிட்டதாக கூறியுள்ளார். தொடர்ந்து, நிலத்தகராறு வழக்கை தீர்க்காததால் மாவட்ட நீதிபதியின் சம்பளத்தை நீதிமன்றம் நிறுத்தி வைத்துள்ளது. மேலும், மனுதாரருக்கு நீதி கிடைக்கும் வரை வழக்கை நிலுவையில் வைத்திருக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.