கோயம்புத்தூருக்கு எவ்வாறு பெயர் வந்தது என்பதற்கு ஏராளமான விளக்கங்கள் சொல்லப்படுகின்றன. அதில் ஒன்றாக, கோனியம்மன் பெயரில் ஊர் பெயர் உருவாகியதாக கூறப்படுகிறது. கோவன் என்ற அரசன் ஆட்சி செய்ததால் கோவன்புதூர் உருவாகி, அது காலப்போக்கில் கோயம்புத்தூர் ஆகிப்போனதாக கூறுகின்றனர். போர் செய்வதையே தொழிலாக கொண்ட கோசர்கள் ஆட்சி செய்ததால் காலப்போக்கில் இந்த பெயர் மாறிப் போனதாகவும் கூறப்படுகிறது.