பல்லடம்: சாலை விபத்து 2 பேர் பலி
பல்லடம் அருகே உள்ள கள்ளக் கிணறு பகுதியைச் சேர்ந்தவர் பெரியசாமி (வயது 84). இவர் தனது ஸ்கூட்டரில் பல்லடம் தாராபுரம் சாலையில் சென்று கொண்டிருந்தார். சாலையை கடக்க முயன்ற போது அந்த வழியாக வந்த கார் மோதி விபத்து ஏற்பட்டது. இதில் ஸ்கூட்டரில் இருந்து கீழே விழுந்த பெரியசாமி படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்து தகவல் இருந்த பல்லடம் போலீசார் பெரியசாமி உடலை மீட்டு பிரத பரிசோதனைக்காக பல்லடம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதே போல் திருப்பூர் மன்னரை பகுதியை சேர்ந்த கார்த்திக் ((44). இவர் பைக்கில் திருப்பூரில் இருந்து பல்லடம் வழியாக கோவை சென்று கொண்டிருந்தார். பல்லடம் திருப்பூர் சாலையில் வந்த போது வெட்டுப்பட்டான் குட்டை அருகே சாலையை கடக்க முயன்ற பைக் மற்றொரு பைக் மீது எதிர்பாராத விதமாக மோதிக்கொண்டது. இந்த விபத்தில் பலத்த காயமடைந்த கார்த்தியை அக்கம்பக்கம் உள்ளவர்கள் நேற்று பல்லடம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தார். இந்த விபத்து குறித்து கார்த்தியின் தந்தை துரைராஜ் கொடுத்த புகாரின் பேரில் பல்லடம் காவல்துறை விசாரணை நடத்தி வருகின்றனர்.