தோட்டக்கலை துறை சார்பாக 1 லட்சம் பனைமரம் விதைகள் நடும் பணி நடைபெறுகிறது. இதனொரு பகுதியாக தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு. பெ சாமிநாதன் மற்றும் மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் துவங்கி வைத்தனர். இதனையடுத்து பல்லடம் அருகே குன்னங்கல்பாளையம் அருள்புரம் பகுதியில் உள்ள தனியார் மண்டபத்தில் பள்ளி கல்வித்துறை சார்பில் 2023-24 ஆம் ஆண்டு பொதுத்தேர்வில் நூறு விழுக்காடு தேர்ச்சி அளித்த பள்ளி தலைமை ஆசிரியர்கள், முதல்வர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான பாராட்டு விழா நிகழ்ச்சியும் நடைபெற்றது. இதில் அமைச்சர்கள் மு பெ சாமிநாதன், கயல்விழி செல்வராஜ், மாவட்ட ஆட்சியர் கிரிஸ்துராஜ், திருப்பூர் மாநகராட்சி மேயர் தினேஷ்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். தொடர்ந்து இந்நிகழ்ச்சியில் திருப்பூர் மாவட்டத்தில் மேல்நிலை இரண்டாம் ஆண்டு மற்றும் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் 100% தேர்ச்சி வழங்கிய 1902 அரசு பள்ளி பாட ஆசிரியர்களுக்கு கேடயம் மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது. இதில் 500க்கும் மேற்பட்ட தலைமை ஆசிரியர்கள், முதல்வர்கள் , ஆசிரியர்கள் கலந்து கொண்டு கேடயம் மற்றும் பாராட்டு சான்றிதழ்களை பெற்றுச் சென்றனர்.