திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் தாலுகா சங்கராமநல்லூர் பேரூராட்சி மயிலாபுரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி ஆண்டு விழாவை முன்னிட்டும் மற்றும் தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலின் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டும் பள்ளியில் பயிலும் குழந்தைகள் அனைவருக்கும் விளையாட்டு மற்றும் கலை இலக்கியப் போட்டிகள் நடைபெற்றது. போட்டியில் கலந்து கொண்ட அனைத்து மாணவச் செல்வங்களுக்கும் சங்கராமநல்லூர் பேரூராட்சி தலைவர் மல்லிகா கருப்பசாமி மற்றும் துணைத் தலைவர் பிரேமலதா உத்தமராஜ், மயிலாபுரம் கிளைக் கழக செயலாளர் சின்னப்பன் (எ) ராமசாமி மற்றும் வழக்கறிஞர் சக்திவேல் கலந்து கொண்டு இனிப்புகள் மற்றும் சிறப்பு பரிசு பொருள்கள் வழங்கப்பட்டது.