உடுமலையில் அரசு பஸ்- ஸ்கூட்டர் மோதல்.. ஒருவர் பலி

85பார்த்தது
உடுமலையில் அரசு பஸ்- ஸ்கூட்டர் மோதல்.. ஒருவர் பலி
திருப்பூர் மாவட்டம் உடுமலை அண்ணா குடியிருப்பு பகுதியில் திண்டுக்கல் மாவட்டம் பழனியை சேர்ந்த மாரிமுத்து கோவையில் உள்ள நகைகடையில் தொழிலாளராக வேலை பார்த்து வருகின்றார். பழனியில் இருந்து கோவை செல்வதற்கு ஸ்கூட்டரில் வந்து கொண்டிருந்தார். அப்போது பழனி சென்ற அரசு பேருந்து மோதியதில் சம்பவ இடத்திலேயே மாரிமுத்து உயிர் இழந்தார். இது குறித்து உடுமலை காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி