திருச்சி அருகே துவாக்குடி சொசைட்டி தெருவை சேர்ந்த நாகம்மாள் மகன் சுரேஷ் குமார் திருமணம் ஆகாத இவருக்கு அதிக குடிப்பழக்கம் உண்டு. இதனால் மனநலம் பாதிக்கப்பட்டவர் போல் நடந்து வந்த சுரேஷ்குமார் நேற்று (பிப்.23) வீட்டுக் கொட்டகையில் சேலையில் தூக்கிட்டுத் தொங்கினார். அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு துவாக்குடி அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறினார். இதுகுறித்து துவாக்குடி போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.