திருச்சி சத்திரம் பஸ் ஸ்டாண்ட் பகுதியில் 2 பிரபலமான ஆண்கள் கல்லூரி மற்றும் பெண்கள் கல்லூரி இயங்கி வருகிறது. இதில் மாலை நேரங்களில் ஏராளமான மாணவர், மாணவிகள் சத்திரம் பேருந்து நிலைய பகுதிகளில் கூடுவார்கள். இந்நிலையில் 20க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவர்கள் சத்திரம் பேருந்து நிலையம் தனியார் கல்லூரி வாயில் அருகே திடீரென ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர். அருகில் விசாரித்த பொழுது கல்லூரி மாணவர்களிடையே ரூட்டு தலை விவகாரம் தொடர்பாக இந்த தகராறு நடந்திருக்கலாம் என கூறப்படுகிறது.
இதில் காதல் விவகாரமும் இருக்கும் என்று கூறப்படுகிறது. இதனால் விரட்டி விரட்டி ஒருவரை ஒருவர் அடித்துக் கொண்டதால் அருகில் இருந்தவர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்ததுடன் ரோந்து வாகனம் வந்ததுடன் கல்லூரி மாணவர்கள் தெறித்து ஓடி விட்டனர். மேலும் இது குறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். சென்னை போன்ற பெருநகரங்களில் ரூட்டு தலை விவகாரம் பெரிய அளவில் விஸ்வரூபம் எடுத்து வரும் நிலையில் திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்திலும் அதிகமான கல்லூரிகள் இருக்கும் பகுதியில் ரூட்டுத்தல் தலை தூக்குகிறதா என்று பொதுமக்களிடையே கேள்வி எழுந்துள்ளது.