மண்ணச்சநல்லூர் சிலோன் காலனி பகுதியைச் சேர்ந்தவர் ராமானுஜம் மனைவி விஜயலட்சுமி வயது 72 கடந்த சில மாதங்களாக கடுமையான முழங்கால் பிரச்சினையால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். தொடர்ந்து சிகிச்சை எடுத்து வந்தும் வலி குறையாததால் மன உளைச்சலுக்கு ஆளானார் விஜயலட்சுமி. கடந்த பத்தாம் தேதி அன்று மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளித்து தற்கொலை செய்து கொள்ள முயற்சித்தார் அவர். பலத்த காயம் அடைந்து திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதைத் தொடர்ந்து சிகிச்சை பலனின்றி அவர் நேற்று உயிரிழந்தார். இதுகுறித்த தகவலின் பேரில் போலீசார் மூதாட்டி விஜயலட்சுமியின் உடலை திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.