2வது திருமணத்துக்கு ஆசைப்பட்ட 55 வயது நபரிடம் நகைகள் அபேஸ்

58பார்த்தது
2வது திருமணத்துக்கு ஆசைப்பட்ட 55 வயது நபரிடம் நகைகள் அபேஸ்
கன்னியாகுமரி: நற்சீசன் (55) என்பவர் தனது முதல் மனைவியை பிரிந்த நிலையில் 2வது திருமணத்துக்கு பெண் தேடினார். அவரை முருகேஸ்வரி என்ற பெண் தன் 3 தோழிகளுடன் வந்து வீட்டில் சந்தித்து திருமணத்துக்கு சம்மதம் தெரிவித்தார். இரவில் நால்வரும் அங்கே தங்கினர். இந்நிலையில் தனது 64 கிராம் நகைகள் காணாமல் போனதால் அதிர்ச்சியடைந்த நற்சீசன் போலீஸ் புகார் கொடுத்த நிலையில் நகைகளை திருடிய 4 பெண்களும் கைது செய்யப்பட்டனர்.

தொடர்புடைய செய்தி