திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூரில் அமைந்துள்ளது அருள்மிகு அறம் வளர்த்த நாயகி உடனுறை பூமிநாத சுவாமி திருக்கோயில். இத்திருக்கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் மார்கழி மாத முதல் ஞாயிறு மகா ருத்ர ஹோமம் நடைபெறும். அதன்படி இந்த ஆண்டு ருத்ர ஹோமம் நேற்று நடைபெற்றது. கணபதி வழிபாட்டோடு தொடங்கி யாக வேதியில் மூலிகைப் பொருட்கள், திரவியங்கள், பழங்கள், அன்னம், மற்றும் காய்கறிகள் உள்ளிட்டவை செலுத்தப்பட்டது.
முன்னதாக யாக வேதி பூஜை பொருட்கள் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது. தொடர்ந்து வஸ்திர ஸ்தானம், திரவ்யாஹுதியும் மஹா பூர்ணாஹூதி நடைபெற்றது. இதனையடுத்து தீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து கடங்கள் புறப்பாடு நடைபெற்ற பிறகு அருள்மிகு பூமிநாத சுவாமிக்கு பால், தயிர், பழ வகைகள், சந்தனம், திரவிய பொடி உள்ளிட்ட அபிஷேக பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. இந்நிகழ்வில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.