திருப்பத்தூர்: கடந்த பத்து ஆண்டுகளாக அரசுப் பேருந்தில் பெண் பயணிகளை குறிவைத்து நகைகளை திருடி வந்த தம்பதியை போலீசார் கைது செய்தனர். வள்ளி என்ற பெண் தனது 2வது கணவர் உதயகுமாருடன் சேர்ந்து நகைகளை திருடி விற்று சொகுசாக இருந்து வந்திருக்கிறார். பேருந்து இருக்கையில் அமர்ந்து பயணிக்கும் வள்ளி, நின்று பயணிக்கும் பயணிகளின் கைப்பையை வைத்திருப்பதாக கூறி கைவரிசை கட்டி வந்ததாக போலீசார் தெரிவித்தனர்.