கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் புதியவர்கள் விண்ணப்பிக்க வாய்ப்பு வழங்கப்படும் என தமிழ்நாடு பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் உரிமைத்தொகை திட்டத்தில் பலன் பெறாத பெண்களின் செல்போன் எண்ணுக்கு குறுஞ்செய்தி அனுப்பப்பட்டுள்ளது. அதில், "கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்துக்கு ரூ.13,807 ஒதுக்கப்பட்டுள்ளது. இதுவரை பலன்பெறாதோருக்கு உரிமைத் தொகை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்" என கூறப்பட்டுள்ளது.