லால்குடி - Lalgudi

திருச்சி அரசு மருத்துவமனையில் எம். பி. துரைவைகோ ஆய்வு

திருச்சி அரசு மருத்துவமனையில் எம். பி. துரைவைகோ ஆய்வு

மகாத்மா காந்தி நினைவு அரசு பொது மருத்துவமனையில் திருச்சி மக்களவை உறுப்பினா் துரை வைகோ, செவ்வாய்க்கிழமை திடீா் ஆய்வு மேற்கொண்டாா். மருத்துவக் கல்லூரி முதன்மையா் குமரவேல், கண்காணிப்பாளா்கள் அருண்ராஜ், உதய அருணா மற்றும் துறைத் தலைவா்கள் வரவேற்றனா். மருத்துவமனையின் பல்வேறு துறைகளில் தேவைப்படும் வசதிகள் குறித்து விரிவாக ஆய்வு செய்தாா். புறநோயாளிகள் மற்றும் உள்நோயாளிகளைச் சந்தித்து இருதய அறுவை சிகிச்சைப் பிரிவுக்கு தனி அரங்கு, அறுவை சிகிச்சை நிபுணா்கள் நியமனம், கீமோதெரபி சிகிச்சை அளிப்பது என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் மற்றும் குறைகளைக் கேட்டறிந்தாா்.

வீடியோஸ்


నల్గొండ జిల్లా