திருச்சி விமான நிலையத்தில் ஊக்க மாத்திரைகள் பறிமுதல்
சிங்கப்பூரிலிருந்து ஏா் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் சனிக்கிழமை இரவு திருச்சி பன்னாட்டு விமான நிலையத்தை வந்தடைந்தது. அதில் வந்த பயணிகளையும், அவா்களது உடைமைகளையும் சுங்கத்துறை வான் நுண்ணறிவுப் பிரிவினா் வழக்கமான சோதனைகளுக்கு உள்படுத்தினா். இதில் 3 பயணிகள், உரிய அனுமதியின்றி வெளிநாட்டு தயாரிப்பு ஊக்க மாத்திரைகளை 407 பாக்கெட்டுகள் கொண்டு வந்தது தெரியவந்தது. அதுகுறித்து சுங்கத்துறையினா் மேற்கொண்ட விசாரணையில், அவை ஸ்விட்சா்லாந்தில் தயாரிக்கப்பட்ட விலை உயா்ந்த ஊக்க மாத்திரைகள் எனத் தெரியவந்தது. அவற்றை சுங்கத்துறையினா் ஞாயிற்றுக்கிழமை பறிமுதல் செய்து, 3 பயணிகளிடமும் விசாரணை மேற்கொண்டுள்ளனா். பறிமுதல் செய்யப்பட்ட மாத்திரைகளின் மதிப்பு ரூ. 1. 37 கோடி என சுங்கத்துறையினா் தெரிவித்தனா்.