டாஸ்மாக்கில் வழக்கத்தை விட தீபாவளி நாளான இன்று (அக். 31) கூட்டம் அலைமோதுகிறது. சென்னையில் உள்ள டாஸ்மாக் கடை ஒன்றில் மது வாங்கிய மதுப்பிரியர் கூறும்போது, “இப்போது 2 குவாட்டர் பாட்டில் வாங்கினேன், சிறிது நேரம் கழித்து மீண்டும் 2 பாட்டில் வாங்குவேன். எப்படியும் இன்று 10 பாட்டில் வாங்கி குடிப்பேன். இங்கு முதலில் மது வாங்கினால் ஒரு சவரன் செயின் கொடுப்பார்கள்” என அலப்பறை செய்தார்.