திருச்சியில் பூட்டை உடைத்து பணம் திருட்டு

74பார்த்தது
திருச்சியில் பூட்டை உடைத்து பணம் திருட்டு
திருச்சி காந்தி மார்க்கெட் மதுரை ரோடு பகுதியில் பெட் கிளினிக் நடத்தி வருபவர் டாக்டர் சிரஞ்சீவிவிகுமார். இவர் கடந்த பிப்ரவரி 23ஆம் தேதி இரவு 10 மணி அளவில் பணிகளை முடித்துக் கொண்டு கிளினிக் பூட்டிவிட்டு வீட்டுக்குச் சென்றார். மீண்டும் மறுநாள் காலை கிளினிக்கை திறக்க வந்தபோது கிளினிக்கின் வாசல் கதவு உடைக்கப்பட்டிருந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது பணப்பெட்டியில் இருந்து 53,000 ரூபாய் ரொக்கம் மாயமாகி இருந்தது. இதுகுறித்து காந்தி மார்க்கெட் போலீசார் வழக்குப்பதிவு செய்து திருட்டில் ஈடுபட்ட மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி