ஆதி நடிப்பில் நாளை (பிப்.,28) வெளியாக உள்ள 'சப்தம்' படத்தின் இயக்குநர் அறிவழகன், திரையரங்கு உரிமையாளர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். அவர் கூறியதாவது, “திரையரங்கு உரிமையாளர்கள் அனைவரும், திரையிடுவதற்கு முன்பே ஒலி பெருக்கி மற்றும் ஒலியமைப்பு கருவிகளை கேலிபிரேட் (Calibrate) செய்து இந்த படத்திற்கென ஒலி அளவினை 6 முதல் 6.5 என்று திரையரங்கு அளவு மற்றும் அமைப்புக்கு ஏற்றவாறு வைக்குமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறோம்” என குறிப்பிட்டுள்ளார்.