லால்குடியில் ஜல்லிக்கட்டு வீடியோ

69பார்த்தது
திருச்சி மாவட்டம் லால்குடி கீழ வீதியில் ஸ்ரீ மகா மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவில் பூச்சொரிதல் விழாவை முன்னிட்டு ஒவ்வொரு ஆண்டும் லால்குடி தெற்கு வீதியில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறும் வழக்கம். இந்நிலையில் ஸ்ரீ மகா மாரியம்மன் கோவில் 61 ஆம் ஆண்டு பூச்சொரிதல் விழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டி இங்கு நடைபெற்றது.

போட்டியை லால்குடி வருவாய் கோட்டாட்சியர் ஜல்லிக்கட்டு வீரர்களுக்கு உறுதிமொழி வாசித்த பின்னர் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் திருச்சி, தஞ்சாவூர், பெரம்பலூர், மதுரை, திண்டுக்கல், அரியலூர், புதுக்கோட்டை, சேலம் உள்ளிட்ட பகுதியிலிருந்து 600 க்கு மேற்பட்ட காளைகளும், 300-க்கும் மேற்பட்ட வீரர்களும் பங்கேற்றுள்ளனர்.

முதலில் கோவில் காளைகள் அவிழ்த்து விடப்பட்டது. பின்னர் போட்டி ஜல்லிக்கட்டு காளைகள் வாடி வாசலை கடந்து சென்ற போது ஜல்லிக்கட்டு வீரர்கள் காளைகளை அடக்கினர்.

ஜல்லிக்கட்டு போட்டியில் காளைகளை அடக்கும் வீரர்களுக்கும், பிடிபடாமல் சென்ற காளைகளின் உரிமையாளர்களுக்கும் பரிசுப் பொருட்கள் வழங்கபட்டது.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி