நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே ராஜேஷ் என்பவர் இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்தார். அப்போது, இரண்டு சிறுத்தைகள் சாலையை கடந்துகொண்டிருந்தன. இதனை கவனிக்காமல் சென்ற ராஜேஷ், ஒரு சிறுத்தை மீது இருசக்கர வாகனத்துடன் மோதினார். இதில் காயமடைந்த அந்த சிறுத்தை சாலையிலேயே படுத்தது. இதனால், சாலையை கடக்க முடியாமல், வாகன ஓட்டிகள் பெரும் அச்சத்தில் இருந்தனர். சிறிது நேரத்திற்குப் பிறகு அந்த சிறுத்தை எழுந்து காட்டுக்குள் சென்றது.