திருச்சி மாவட்டம் துறையூர் வட்டாரத்தில் வேளாண்மை கல்லூரி மாணவிகள் கிராம தங்கல் திட்டத்தின் கீழ் பயிற்சி பெற்று வருகின்றனர். கீராம்பூர் கிராமத்தில் வேளாண்மை உதவி இயக்குநர் வீரமணி முன்னிலையில் விவசாயிகளுக்கு பங்கேற்பு கிராமப் புறமதிப்பீடு நடைபெற்றது. இதில் செல்வதர வரிசை, பிரச்சனை மரம், சமூக வரைபடத்தை வரைந்து விளக்கமளித்தனர். செல்வதர வரிசை என்பது விவசாயிகளின் வாழ்வையும் வாழ்வாதாரத்தையும் பற்றி எடுத்துரைக்கும்.
பிரச்சனை மரம் என்பது விவசாயிகளின் பிரச்சனைகளையும், அதன் காரணங்களையும் மற்றும் தீர்வுகளையும் எடுத்துரைக்கும். சமூக வரைபடம் என்பது கீராம்பூர் கிராமத்தின் அமைப்பையும் அதில் உள்ள வளங்களின் அமைப்பையும், பள்ளி, கல்லூரி போன்ற அலுவலகங்களின் அமைப்பையும் பற்றி எடுத்துரைக்கும். எனவே அனைத்து வகை பங்கேற்பு கிராமப் புறமதிப்பீடுகளை வேளாண்மை கல்லூரி மாணவிகள், அபிநயா, அனாமிகா, அருள்மொழி, பவித்ரா, புவனா, தீபா, தீபிகா, தனம், தர்ஷினி, திவேனா, ஸ்ரீ சஞ்சனா, திரிசா ஆகிய மாணவிகள் பயிற்சியை நடத்தி முடித்தனர். இப்பயிற்சியில் 40 விவசாயிகள் கலந்து கொண்டனர்.