ஓட்டப்பிடாரம் - Ottapidaram

தூத்துக்குடி: ரயில்வே ஊழியர் மீது தாக்குதல்; கேட் கீப்பர் கைது

தூத்துக்குடி: ரயில்வே ஊழியர் மீது தாக்குதல்; கேட் கீப்பர் கைது

வாஞ்சி மணியாச்சி ரயில் நிலையம் அருகே ரயில்வே கேட் மேனை தாக்கியதாக கேட் கீப்பரை போலீசார் நேற்று கைது செய்தனர். தூத்துக்குடி மாவட்டம் பரிவல்லிக்கோட்டையைச் சேர்ந்த சந்தானம் அலெக்சாண்டர் மகன் ஜார்ஜ் (40). ரயில்வே துறையில் கேட் மேனாக உள்ள இவர், வாஞ்சி மணியாச்சியை அடுத்த ஒட்டநத்தம் செல்லும் சாலையில் உள்ள ரயில்வே கேட் அருகே நேற்று முன்தினம் பணியிலிருந்தார். பயணிகள் ரயில் வந்ததையொட்டி, ரயில்வே கேட் பூட்டப்பட்டிருந்தது. அப்போது, அவருக்கும், கேட் கீப்பருமான முருகனுக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாம். அங்கு கிடந்த மண்வெட்டிக் கணையால் ஜார்ஜை முருகன் தாக்கினாராம். இதில், காயமடைந்த அவர் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். புகாரின்பேரில், தூத்துக்குடி ரயில்வே போலீசார் வழக்குப் பதிந்து, முருகனை நேற்று கைது செய்தனர்.

வீடியோஸ்


కరీంనగర్ జిల్లా