சிறையில் மோதல்; 46 கைதிகள் வேறு சிறைகளுக்கு இடமாற்றம்!

75பார்த்தது
தூத்துக்குடி பேரூரணி சிறையில் கைதிகளுக்குள் ஏற்பட்ட மோதல் விவகாரம் தொடர்பாக 46 கைதிகள் வேறு மாவட்ட சிறைகளுக்கு மாற்றப்பட்டனர்.

தூத்துக்குடி அருகே உள்ள பேரூரணி சிறையில், கடந்த 7ஆம் தேதி இரவு 2ஆவது தொகுப்பில் இருந்த கைதிகளுக்குள் படுப்பதற்கு பாய் விரிப்பதில் தகராறு ஏற்பட்டதாம். இதில் அவர்கள் இரு பிரிவினராக பிரிந்து தாக்கிக் கொண்டதில் 13 பேர் காயம் அடைந்தனர்.

இது குறித்து தகவல் அறிந்த சிறைத் துறை டிஐஜி பழனி, காவல் கண்காணிப்பாளர் செந்தாமரைக்கண்ணன் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் சிறையில் சென்று விசாரணை மேற்கொண்டனர். தொடர்ந்து, மோதலில் ஈடுபட்டவர்கள் விவரம் கண்டறியப்பட்டது.

மோதல் குறித்து பேரூரணி மாவட்ட துணை சிறை அலுவலரும், கண்காணிப்பாளருமான(பொறுப்பு) அப்துல் ரஹிம் அளித்த புகாரின் பேரில் தட்டப்பாறை போலீசார் 46 கைதிகள் மீது 6 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் மோதலில் ஈடுபட்ட 46 கைதிகளும், பாளையங்கோட்டை, நாகர்கோவில், புதுக்கோட்டை, தேனி, மதுரை, விருதுநகர், கோவை, திருச்சி ஆகிய சிறைகளுக்கு இடமாற்றம் செய்யப்பட்டதாக சிறைத்துறை வட்டாரங்கள் தெரிவித்தன

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி