மாநகராட்சியுடன் இணைக்க கிராம மக்கள் எதிர்ப்பு; ஆட்சியர் அலுவலகம் முற்றுகை

52பார்த்தது
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள கோரம் பள்ளம் பஞ்சாயத்து பகுதியைச் சேர்ந்த கிராமங்களான காலங்கரை, கோரம்பள்ளம், பெரியநாயகிபுரம், அந்தோணியார் புரம், உள்ளிட்ட பகுதிகளை மாநகராட்சியுடன் இணைக்க உள்ளதாக கூறப்படுகிறது.

இதைத்தொடர்ந்து கோரம்பள்ளம் பஞ்சாயத்து பகுதியைச் சேர்ந்த காலங்கரை, பெரியநாயகிபுரம், கோரம்பள்ளம், உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட கிராம மக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது பஞ்சாயத்தை மாநகராட்சியுடன் இணைக்க கூடாது அவ்வாறு இணைத்தால் தங்களுக்கு 100 நாள் வேலைத்திட்டம் உள்ளிட்ட பல்வேறு சலுகைகள் இல்லாமல் பாதிக்கும் சூழ்நிலை ஏற்படும் மேலும் வீட்டு வரி, தண்ணீர் வரி, உள்ளிட்ட வரிகளும் உயர வாய்ப்புள்ளது.

அங்கு வசிக்கும் பொது மக்கள் ஏராளமானோர் விவசாயக் கூலி தொழிலாளர்கள் எனவே மாநகராட்சி யுடன் இணைக்க கூடாது என்ற கோரிக்கை வலியுறுத்தி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

தொடர்புடைய செய்தி