கோவில்பட்டி - Kovilpatti

கோவில்பட்டி: சிறுமிக்கு பாலியல் தொல்லை..முதியவருக்கு 20 ஆண்டுகள் சிறை

கோவில்பட்டி: சிறுமிக்கு பாலியல் தொல்லை..முதியவருக்கு 20 ஆண்டுகள் சிறை

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் கடந்த 2020 ஆம் ஆண்டு ஏழு வயது சிறுமியை பாலியல் வன்புணர்ச்சி செய்த வழக்கில் ஆரோக்கியசாமி என்பவருக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை பத்தாயிரம் ரூபாய் அபராதம் விதித்து தூத்துக்குடி மாவட்ட போக்சோ நீதிமன்றம் உத்தரவிட்டது. பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூபாய் 5 லட்சம் நிவாரணம் வழங்க உத்தரவிட்டது.  தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அனைத்து மகளிர் காவல் நிலையம் எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த 2020 ஆம் ஆண்டு 7 வயது சிறுமியை பாலியல் வன்புணர்ச்சி செய்ததாக கோவில்பட்டி பாரதிநகரை சேர்ந்த ஆரோக்கியசாமி என்பவரை கைது செய்த அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் இதுதொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை தூத்துக்குடி மாவட்ட போக்ஸோ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.  இதைத்தொடர்ந்து வழக்கை விசாரணை செய்த தூத்துக்குடி மாவட்ட போக்ஸோ நீதிமன்ற நீதிபதி சுரேஷ் குற்றவாளி ஆரோக்கியசாமிக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை ரூபாய் 10 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார். மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு அரசு நிவாரண நிதியிலிருந்து 5 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க உத்தரவிட்டார்.

வீடியோஸ்


కరీంనగర్ జిల్లా