புதுக்கோட்டை: வேங்கைவயல் வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள காவலர் முரளி ராஜா வீட்டில் போலீசார் நோட்டீஸ் ஒட்டியுள்ளனர். மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் மனிதக்கழிவு கலக்கப்பட்ட சம்பவத்தில், காவலர் முரளி ராஜா மீதும் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதனால் அவர் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்த நாள் முதல் தற்போது வரை பணிக்கு வரவில்லை.
முரளி ராஜா தொடர்ந்து பணிக்கு வராததால், அவரை 'விட்டோடி' என அறிவித்து இல்லத்தில் காவல்துறை நோட்டீஸ் ஒட்டியுள்ளது.