கோவில்பட்டி: கடின உழைப்பும் பயிற்சியும் இருந்தால் உயர் பதவி கிடைக்கும்!

77பார்த்தது
கோவில்பட்டி: கடின உழைப்பும் பயிற்சியும் இருந்தால் உயர் பதவி கிடைக்கும்!
கடின உழைப்பும் பயிற்சியும் இருந்தால் உயர் பதவி கிடைக்கும் என்று புதுச்சேரி அரசு செயலர் சுந்தரேசன் மாணவர்களுக்கு அறிவுரை வழங்கி பேசினார்.

கோவில்பட்டி எஸ். எஸ். துரைச்சாமி நாடார் மாரியம்மாள் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தமிழ்த்துறை முத்தமிழ் மன்றம் சார்பில் "நீங்களும் ஐ. ஏ. எஸ். ஆகலாம்" என்ற தலைப்பில் கருத்தரங்கு நடந்தது. நிகழ்ச்சிக்கு நாடார் உறவின்முறை சங்க செயலாளர் ஜெயபாலன் தலைமை வகித்தார். சென்னைவாழ் நாடார்கள் சங்க பொதுச் செயலாளர் தங்கமுத்து, விளாத்திகுளம் நாடார் உறவின்முறை சங்கத் தலைவர் முத்துகாமாட்சி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கல்லூரி தமிழ்த்துறை தலைவர் செல்வம் அனைவரையும் வரவேற்றார். கல்லூரி செயலாளர் கண்ணன் நோக்க உரையாற்றினார்.

புதுச்சேரி அரசு செயலர் சுந்தரேசன் ஐ. ஏ. எஸ். சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு நிறைமதி பல்சுவை மலரை வெளியிட்டும், சிறந்த ஆராய்ச்சியாளருக்கான விருதினை பேராசிரியர் ரவி முருகனுக்கு வழங்கியும் நீங்களும் ஐ. ஏ. எஸ் ஆகலாம் கருத்தரங்கினை குத்துவிளக்கேற்றி தொடக்கி வைத்து பேசியதாவது: மாணவர்கள் ஐ. ஏ. எஸ் தேர்வு எழுதுவதற்கு முதன்மை தேர்வு, மெயின் தேர்வு, நேர்முகத்தேர்வு போன்றவற்றை எதிர்கொள்ள வேண்டும். மாணவர்கள் கடின உழைப்புடன் பயிற்சி செய்து படித்தால் உயர் பதவி கிடைக்கும்.

தொடர்புடைய செய்தி