விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர், வத்திராயிருப்பு மற்றும் சுற்றுவட்டார பகுதிகளான கூமாபட்டி, கான்சாபுரம், பட்டுப்பூச்சி, தம்பிபட்டி, நெடுங்குளம், மகாராஜபுரம் உள்ளிட்ட சுற்று வட்டார பகுதிகளில் நெல், தென்னை விவசாயம் என்பது பிரதானமாக நடைபெற்று வருகிறது. குறிப்பாக வத்திராயிருப்பு சுற்றுவட்டார பகுதிகளில் ஆயிரக்கணக்கான ஏக்கரில் தென்னை விவசாயமே பிரதானமாக நடைபெற்று வருகிறது. தற்போது தேங்காய் விலை 15 ரூபாய்க்கு கொள்முதல் செய்யப்படுவதால் விவசாயிகள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.