கேரளா: மலப்புரத்தில் தாயை வெட்டிக் கொன்ற மகன் கைது செய்யப்பட்டுள்ளார். ஆமினா (62) என்பவரை அவரது மகன் இன்று (பிப்., 21) காலை ஏழு மணியளவில் கொலை செய்தார்.
மகனுக்கு சற்று மனநலம் பாதிக்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர். கணவர் வேலைக்கு சென்ற நிலையில், ஆமினாவுக்கும், மகனுக்கும் தகராறு ஏற்பட்டது. அப்போது சமையல் அறையில் இருந்த அமீனாவை மகன் அரிவாளால் வெட்டினார். தொடர்ந்து வீட்டுக்குள் அமர்ந்திருந்த குற்றவாளியை போலீசார் கைது செய்தனர்.