ஜர்னல் ஆஃப் எண்டோடோன்டிக்ஸ் என்ற இதழ் வெளியிட்டுள்ள ஆய்வில் பல்லுக்கும், இதய பிரச்சனைகளுக்கும் தொடர்புள்ளதாக கூறப்பட்டுள்ளது. பெரும்பாலான பற்களை இழந்தவர்களுக்கு மாரடைப்பு வருவதற்கான அபாயம் 66% அதிகம் என்றும், பல் ஈறுகள் வழியாக கிருமிகள் உடலுக்குள் நுழைந்து உடல்நல பிரச்சனைகளை ஏற்படுத்துவதாகவும் கூறப்பட்டுள்ளது. வாயை சுத்தமாக வைத்திருப்பது நோயிலிருந்து பாதுகாப்பதற்கான சிறந்த வழி எனவும் கூறப்பட்டுள்ளது.