பாதயாத்திரை செல்பவர்களுக்கு பிரதிபலிக்கும் ஸ்டிக்கர்கள்
வேளாங்கண்ணி ஆரோக்கிய மாதா கோவில் திருவிழா இன்று முதல் தொடங்கி நடைபெற உள்ளது இதனை ஒட்டி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் வேளாங்கண்ணி கோவிலுக்கு பாதயாத்திரை செல்வது வழக்கம். அந்த வகையில் பாதயாத்திரை செல்லும் பக்தர்கள் பாதுகாப்பாக பயணம் மேற்கொள்ள பிரதிபலிக்கும் ஸ்டிக்கர்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் வழங்கினார். கானூர் சோதனைச்சாவடி வழியாக வேளாங்கண்ணி கோவிலுக்கு பாதயாத்திரையாக செல்லும் பக்தர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையிலும், பக்தர்களின் நலனை கருத்தில் கொண்டும் பக்தர்கள் எடுத்து செல்ல கூடிய பைகள் (Bag) மற்றும் அவர்களின் ஆடைகளில் இரவில் பிரதிபலிக்கும் ஸ்டிக்கர் (Reflective Sticker) ஒட்டியும், தூக்கம் மற்றும் அதிக களைப்புடன் பயணம் மேற்கொள்வதை தவிர்த்து, ஓய்வு எடுத்துவிட்டு பாதுகாப்பாக பயணம் மேற்கொள்ளுமாறு பாதயாத்திரை செல்லும் பக்தர்களுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் அறிவுறுத்தினார்கள். மேலும், கானூர் சோதனைச்சாவடி வழியாக வேளாங்கண்ணி கோவிலுக்கு பாதயாத்திரையாக செல்லும் பக்தர்கள் எடுத்து செல்லும் பைகளில் பிரதிபலிக்கும் ஸ்டிக்கர் ஒட்ட (Reflective Sticker) சோதனைச்சாவடி பணியில் உள்ள காவலர்களுக்கு அறிவுரை வழங்கினார்கள்.