நீடாமங்கலம் நீலன் கல்வி குழுமங்களின் தலைவர் நீலன் அவர்களின் முதலாம் ஆண்டு நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது இதனை ஒட்டி பள்ளி வளாகத்தில் கட்டப்பட்ட மணிமண்டபத்தை தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் தங்கபாலு திறந்து வைத்தார் மணி மண்டபத்தில் அமைக்கப்பட்டிருந்த நீலன் அவர்களின் திரு உருவ சிலையை முன்னாள் உணவுத்துறை அமைச்சர் ஆர் காமராஜ் திறந்து வைத்து மலர் தூவி மரியாதை செலுத்தினார் நிகழ்ச்சியில் அதிமுக திமுக காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளை சேர்ந்த முக்கிய பிரமுகர்கள், பள்ளியின் தாளாளர் நீலன் அசோகன் மற்றும் பொதுமக்கள் ஏராளமானோர் பங்கேற்றனர்.