கீரனூரில் தொடக்கப் பள்ளியை திறந்து வைத்த முன்னாள் அமைச்சர்

56பார்த்தது
நன்னிலம் அருகே புதிய பள்ளி வகுப்பறை கட்டிடம் திறக்கப்பட்டது. முன்னாள் அமைச்சர் ஆர். காமராஜ் திறந்து வைத்தார்.

நன்னிலம் தொகுதிக்கு உட்பட்ட கீரனூர் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் புதிய இரண்டு வகுப்பறை கட்டிடங்கள் கட்டப்பட்டு திறந்து வைக்கப்பட்டது.
தமிழக முன்னாள் உணவுத்துறை அமைச்சரும், நன்னிலம் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான ஆர். காமராஜ், தனது தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து சுமார் 27 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட புதிய இரண்டு வகுப்பறை கட்டிடத்தை ரிப்பன் வெட்டியும் குத்து விளக்கு ஏற்றியும் பயன்பாட்டிற்கு நேற்று திறந்து வைத்தார்.
இந்த நிகழ்வில் நன்னிலம் வடக்கு ஒன்றிய அதிமுக செயலாளர் சி பி ஜி அன்பு, கல்வி மேலாண்மை குழு உறுப்பினர்கள், கீரனூர் பகுதியை சார்ந்த குமரசேகர், கிரிஜா, ராஜா மற்றும் சம்பத், முன்னாள் மாவட்ட ஊராட்சி ராஜேந்திரன், தகவல் தொழில்நுட்ப பிரிவு மண்டல இணைச் செயலாளர் செல் சரவணன் மற்றும் தலைமை ஆசிரியர், பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள், பொதுமக்கள் பலரும் கலந்து கொண்டனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி