திருவாரூர் மாவட்டம், நன்னிலம் தொகுதிக்கு உட்பட்ட வலங்கைமான் கிழக்கு ஒன்றிய பகுதிகளில் வாக்குச்சாவடி முகவர்கள் கள ஆய்வு ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. முன்னாள் அமைச்சர் காமராஜ் தலைமையில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் தலைமை அதிமுக பார்வையாளர்கள் இளவரசன், மணிகண்டன் ஆகியோர் கலந்து கொண்டு ஆலோசனைகள் வழங்கினர்.
திருவாரூர் மாவட்டம், நன்னிலம் தொகுதிக்கு உட்பட்ட வலங்கைமான் கிழக்கு ஒன்றிய பகுதிகளில் உள்ள கொட்டையூர், அரையூர், மாணிக்கமங்கலம், பாப்பாக்குடி உள்ளிட்ட 25 ஊராட்சிகளில் நடைபெற்றது. கூட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சர் ஆர் காமராஜ் வருகின்ற 2026 ஆம் வருடம் தமிழக சட்டசபை தேர்தல் வர இருக்கும் நிலையில். தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சரும், அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடியார்-ன் ஆலோசனைக் கிணங்க. தமிழகம் முழுதும் 234 தொகுதிகளிலும் வாக்கு சாவடி முகவர்கள் நியமிக்கப்பட்டு. அனைத்து பகுதிகளிலும் கள ஆய்வு ஆலோசனைக் கூட்டம் நடைபெற்று வருகிறது. ஒரு பூத்துக்கு 9 முகவர்கள் என்கிற அடிப்படையில் ஆறு ஆண்கள், மூன்று பெண்கள் வீதம் பூத் கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது.
என்றைக்கு தேர்தல் வந்தாலும் அதிமுக ஆட்சி அமைக்கும் என்றும் எந்த கொம்பனும் அதிமுகவை அழித்து விடவோ ஒளித்து விடவோ முடியாது. இன்றைய இளைஞர்கள் அதிமுகவில் தான் பெருமளவு உள்ளனர் என்றும் தெரிவித்தார்.