காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் குமரிஆனந்தன் நேற்று காலமானார். அவரது மறைவுக்கு மன்னார்குடி பெரியார் சிலை சந்திப்பில் நகர காங்கிரஸ் கட்சித் தலைவர் கனகவேல் தலைமையில் அஞ்சலி நிகழ்ச்சி இன்று (ஏப்ரல் 9) மாலை நடைபெற்றது. இதில் முன்னாள் மாவட்ட ஊராட்சி தலைவர் தலையாமங்கலம் பாலு, மாவட்ட திராவிடர் கழக தலைவர் ஆர். பி. சித்தார்த்தன் மற்றும் பல்வேறு கட்சியினர் பங்கேற்று அஞ்சலி செலுத்தினர்.