ராயபுரத்தில் பக்தர்கள் பால்குடம் எடுத்து வழிபாடு

61பார்த்தது
பங்குனி உத்திரத்தையொட்டி நல்ல குருந்த அய்யனார் கோவிலுக்கு பக்தர்கள் பால்குடம் எடுத்துச் சென்று வழிபட்டனர்.

பங்குனி உத்திர திருநாளையொட்டி தமிழகத்தின் பல்வேறு ஆலயங்களிலும் இன்று திருவிழாக்கள் நடைபெற்றது. இதன் ஒரு பகுதியாக திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் அருகே உள்ள ராயபுரம் கிராமத்தில் பழமையான நல்ல குருந்த அய்யனார் கோவில் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் பக்தர்கள் பால்குடம் மற்றும் காவடி எடுத்து வந்து வழிபடுவது வழக்கம். இந்நிலையில் இந்த ஆண்டு பங்குனி உத்திர திருநாள் ஆன இன்று பெண்கள் உள்ள பக்தர்கள் ராயபுரம் சிவன் கோவிலில் இருந்து பால்குடம் மற்றும் காவடிகளை சுமந்து ஊர்வலமாக குருந்த அய்யனார் கோவிலுக்கு வந்தடைந்தனர். அங்கு அய்யனாருக்கு சிறப்பு பால் அபிஷேகம் நடைபெற்று மலர் அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். விழாவில் சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி