மன்னார்குடியில் சேஷ வாகனத்தில் ராஜகோபாலசுவாமி உலா

83பார்த்தது
மன்னார்குடி ராஜகோபால சுவாமி கோவில் பங்குனி பெருவிழா கடந்த 18ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்ற வருகிறது. நாள்தோறும் சுவாமி பல்வேறு வாகனங்களில் பலவித அலங்காரங்களில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாளித்து வருகிறார். இன்று 11 வது நாளாக கோபிநாதன் கோவிலில் இருந்து பரமநாதன் அலங்காரத்தில் வெள்ளி சேஷ வாகனத்தில் ராஜகோபால சுவாமி எழுந்தருளினார். பக்தர்கள் அர்ச்சனை செய்து வழிபட்டனர். 18 நாள் நடைபெறும் பங்குனி பெருவிழாவில் முக்கிய விழாவான கருட சேவை நாளை இரவு நடைபெற உள்ளது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி