மஞ்சக்குடியில் திமுக சார்பில் பொதுக்கூட்டம்

70பார்த்தது
மத்திய பாஜக அரசு மாநிலங்களின் உரிமைகளை பறிப்பதுடன், இந்தி திணிப்பு, நிதி பகிர்வில் பாரபட்சம், தொகுதி மறுசீரமைப்பில் அநீதி என பல்வேறு வகையில் மாநிலங்களை ஒடுக்கும் வகையில் செயல்பட்டு வருகின்ற மத்திய பாஜக அரசை கண்டித்து திருவாரூர் மாவட்டம் குடவாசல் அருகே நன்னிலம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மஞ்சக்குடி பகுதியில் திமுக இளைஞரணி சார்பில் மாபெரும் பொதுக்கூட்டம் நேற்று (ஏப்ரல் 5) இரவு நடைபெற்றது. 

இதில் பொதுக்கூட்டம் தொடங்கியவுடன் தமிழ்நாடு போராடும் தமிழ்நாடு வெல்லும் என்ற உறுதிமொழியை திமுக மாவட்ட செயலாளர் சட்டமன்ற உறுப்பினர் பூண்டி கலைவாணன் வாசிக்க ஆயிரத்திற்கும் அதிகமானோர் திரும்ப கூறி உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட திமுக தலைமை கழக தேர்தல் பணிக்குழு செயலாளர் கம்பம் செல்வேந்திரன் திராவிட இயக்கத்தின் தோற்றம், நீதி கட்சி வரலாறு, ஹிந்தி திணிப்பு உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து விளக்கமாக எடுத்துரைத்தார். 

இந்த நிகழ்ச்சியில் திமுக மாநில இளைஞர் அணி துணை செயலாளரும் தாட்கோ தலைவருமான இளையராஜா, ஒன்றிய செயலாளர்கள் பிரபாகரன், ஜோதிராமன், மனோகரன், கலியபெருமாள், செல்வராஜ், அன்பரசன், தட்சிணாமூர்த்தி உள்ளிட்ட ஒன்றிய, நகர, பேரூர் கழக நிர்வாகிகள், சார்பு அணி நிர்வாகிகள், தொண்டர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி