ஆளுநருக்கு எதிரான உச்சநீதிமன்ற தீர்ப்பு. மன்னார்குடியில் திமுகவினர் பட்டாசு வெடித்து வரவேற்பு
தமிழக அரசு சட்ட சபையில் நிறைவேற்றிய மசோதாக்களை ஆளுநர் நீண்ட நாட்களாக கிடப்பில் போட்டு இருப்பதாக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது இந்த வழக்கு விசாரணை முடிவடைந்து நேற்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதில் தமிழக ஆளுநர் மசோதாக்களை கிடப்பில் வைத்திருந்தது சட்டவிரோதமானது எனவும் அதை அந்த மசோதாக்களை தனக்குரிய சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்தி உச்ச நீதிமன்றம் படுத்தியது இந்த தீர்ப்பை வரவேற்று மன்னார்குடியில் நேற்று திமுகவினர் பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி வரவேற்றனர். நிகழ்ச்சியில் நகர திமுக செயலாளர் வீரா. கணேசன், மன்னார்குடி நகர மன்ற தலைவர் மன்னை. சோழராஜன், நகர மன்ற துணைத் தலைவர் கைலாசம் மற்றும் ஏராளமாக திமுகவினர் கலந்து கொண்டனர்