திருத்தணி - Thiruthani

திருத்தணி: தீப்பிடித்து எரிந்த ஏடிஎம்

திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி அருகே கனகம்மாசத்திரம் பஜாரில் எச்.டி.எஃப்.சி வங்கிக்கு சொந்தமான ஏடிஎம் மையத்தில் மின் கசிவு காரணமாக நேற்று முன்தினம் மாலை தீப்பிடித்து கொழுந்து விட்டு எரிந்தது.  இதில் ஏடிஎம் மெஷின் எரிந்து நாசமானது. பல லட்சம் ரூபாய் பணம் ஏடிஎம் மெஷினில் வைக்கப்பட்டிருந்த நிலையில் திடீரென்று மின் கசிவால் ஏடிஎம் மையம் முழுவதும் எரிந்து நாசமான சம்பவம் தொடர்பாக கனகம்மாசத்திரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். அதே நேரத்தில் தடயவியல் துறை அலுவலர்கள் தீ விபத்து ஏற்பட்ட ஏடிஎம் மையத்தில் கதவு, சுவர், மின் கசிவு நடைபெற்ற பகுதிகளில் தடயங்களை சேகரித்தனர்.  இதன் அடிப்படையில் விசாரணை நடத்தப்படுகிறது. தீ விபத்து குறித்து வங்கி அதிகாரி கூறுகையில், கனகம்மாசத்திரம் ஏடிஎம் மெஷினில் ரூ.10 லட்சம் வைக்கப்பட்டிருந்தது. மின் கசிவால் ஏற்பட்ட தீவிபத்தில் ஏடிஎம் மெஷினில் பணம் இருப்பு வைக்கப்படும் பகுதி மிகவும் பாதுகாப்பான முறையில் இருக்கும் என்று நினைக்கிறோம். மும்பையிலிருந்து ஏடிஎம் மெஷின் தயாரிப்பு நிறுவன பொறியாளர்கள் வந்து திறந்து பார்த்தால் மட்டுமே எதுவும் சொல்ல முடியும். மெஷின் தயாரிப்பு நிறுவன பொறியாளர்கள் வருவதாக தெரிவித்தார்.

வீடியோஸ்


కొమరంభీం జిల్లా