பூந்தமல்லி ஒன்றியத்திற்கு உட்பட்ட அகரம் மேல் ஊராட்சியில் புதிதாக ரூபாய் 35 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட துணை சுகாதார நிலையம் மற்றும் சோரான்சேரி ஊராட்சியில் ரூபாய் 50 லட்சம் மதிப்பில் வட்டார பொது சுகாதார கட்டிடம் என ரூபாய் 1 கோடியே 95 லட்சம் மதிப்பீட்டில் அரசு புதிய கட்டிடங்களை மருத்துவம் மற்றும் மக்கள் நலத்துறை அமைச்சர் சுப்பிரமணியம் பங்கேற்று திறந்து வைத்தார்.
இதில் அமைச்சர் நாசர், திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் பிரதாப் உள்ளிட்ட மருத்துவர்கள், செவிலியர்கள் பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர். காலை 9 மணிக்கு நிகழ்ச்சி தொடங்கும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் அமைச்சர் தாமதமாக வரவே மதியம் வரை நிகழ்ச்சி தொடர்ந்ததால் இதில் காலை முதல் சாப்பிடாமல் செவிலியர் ஒருவர் இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் அவர் திடீரென மயங்கி கீழே விழுந்தார். அதனை கண்டு அவரது தோழி உடனடியாக குண்டு கட்டாக தூக்கிச் சென்று படுக்க வைத்து முதலுதவி சிகிச்சை அளித்தனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.