தேசிய சாலை பாதுகாப்பு மாதம் போக்குவரத்து போலீசாரால் கடைபிடிக்கப்பட்டு வரும் நிலையில் இன்று சென்னை அடுத்த பூந்தமல்லி போக்குவரத்து போலீசார் சார்பில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி நடத்தப்பட்டது. பூந்தமல்லி அடுத்த கல்லறை பேருந்து நிறுத்தத்தில் இருந்து தொடங்கிய பேரணியில் 500க்கும் மேற்பட்ட பிரதுஸ்யா தனியார் கல்லூரி மாணவர்கள் கையில் சாலை விழிப்புணர்வு குறித்த பதாகைகளுடன் பேண்ட் வாத்தியங்கள் இசைக்க சாலையில் ஊர்வலமாக நடந்து சென்றனர்.
இதில் போக்குவரத்து கூடுதல் கமிஷனர் பவானீஸ்வரி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு கொடியசைத்து விழிப்புணர்வு பேரணியை தொடங்கி வைத்தார். இதில் போக்குவரத்து துணை கமிஷனர் அன்பு மற்றும் போக்குவரத்து போலீசார் கலந்து கொண்டனர். அதுமட்டுமின்றி ஹெல்மெட் அணியாமல் சென்ற இரு சக்கர வாகன ஓட்டிகளை நிறுத்தி அவர்களுக்கு இலவசமாக ஹெல்மெட் கொடுத்து வாகனத்தை ஓட்டி செல்ல வேண்டும் என அறிவுறுத்திய நிலையில் துண்டு பிரசுரங்களும் வழங்கினார்கள். இதில் பூந்தமல்லி போக்குவரத்து காவல் ஆய்வாளர் சந்திரமவுலி மற்றும் சக போக்குவரத்து காவலர்கள் உடன் இருந்தனர்.