பொன்னேரி - Ponneri

திருவள்ளூர்: சாகர் கவஜ் தீவிரவாத ஊடுருவலை தடுப்பதற்கான ஒத்திகை நிகழ்ச்சி

திருவள்ளூர் மாவட்டம், தமிழக கடற்கரை பகுதிகளில் ஆண்டுதோறும் சாகர் கவஜ் எனப்படும் தீவிரவாத ஊடுருவலை தடுப்பதற்கான ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது.  அதன்படி திருவள்ளூர் மாவட்டம் பழவேற்காடு கடற்கரை பகுதியில் பொன்னேரி காவல் ஆய்வாளர் குணசேகரன் தலைமையிலும் தமிழக கடற்கரை கடலோர காவல் படை உதவி ஆய்வாளர் சபாபதி தலைமையிலும் இரு பிரிவாக கடற்கரை பகுதியில் தீவிர சோதனையில் ஈடுபட்டு வந்தனர். வாகன சோதனை, பழவேற்காடு கடற்கரை மற்றும் ஏரி பகுதியில் சோதனை, எண்ணூர் காமராஜர் துறைமுகம் மற்றும் அதானி துறைமுகங்களில் சோதனைகளில் ஈடுபட்டு வந்த நிலையில் அதானி துறைமுகத்தின் வழியாக ஊடுருவ முயன்ற நான்கு பேரை சபாபதி தலைமையிலான காவல்துறையினர் கைது செய்தனர். மேலும் இன்று மாலை வரை ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது.

வீடியோஸ்


కొమరంభీం జిల్లా