திருவள்ளூர் மாவட்டம் ஆண்டார்குப்பத்தில் அதிமுக திருவள்ளூர் வடக்கு மாவட்டம் பொன்னேரி தொகுதி மற்றும் சோழவரம் ஒன்றியம் ஆரணி பேர் ஒரு கழக அதிமுக நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் மாவட்ட கழகச் செயலாளர் முன்னாள் பொன்னேரி சட்டமன்ற உறுப்பினர் பலராமன் தலைமையில் நடைபெற்றது இதில் சிறப்பு அழைப்பாளராக முன்னாள் அமைச்சர் அதிமுக தலைவர் செய்தி தொடர்பாளர் பொன்னியின் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார் அப்போது அவரிடம் அதிமுக பெண் நிர்வாகிகள் தங்களுக்கு உரிய முன்னுரிமை கட்சியில் வழங்க வேண்டும் என்று பேசினர் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பொன்னையின் எடப்பாடி பழனிச்சாமி அவர்களின் பாச பிள்ளைகள் பாச உடன் பிறப்புகள் நாங்கள் எங்களை யாராலும் மிரட்ட முடியாது இளைஞர்களிடம் கட்சிப் பணிகள் பதவிகள் ஒதுக்கப்படும் இருக்கிற பதவியை இளைஞர்களுக்கு கொடுப்போம் நாங்கள் மூத்த தலைவர்கள் ஆலோசகர்களாக இருப்போம் கட்சிப் பதவிகள் இளைஞர்களுக்கு ஒதுக்கப்படும் என பொன்னையன் தெரிவித்தார் கோடிக்கணக்கான பணம் பிஜேபியிடம் உள்ளது உலகக் கோடீஸ்வரர்கள் தான் பிஜேபியை நடத்துகின்றனர் தமிழ்நாட்டில் இந்தியை திணிக்கிறார்கள் நிதி ஒதுக்கீட்டை தமிழகத்திற்கு ஏமாற்றுகின்றனர் நதிநீர் பிரச்சனையில் வஞ்சகம் செய்கின்றனர் இப்படி இருந்தால் பிஜேபிக்கு தமிழ்நாட்டில் மக்கள் இடம் தர மாட்டார்கள் மோடிக்கு பரம எதிரிகள் தமிழும் தமிழகம் மக்களும் தான் என அவர் தெரிவித்தார்.