பழவேற்காடு அரசு மருத்துவமனை எதிரில் சுமார் 45 வயது மதிக்கத்தக்க பெண் ரத்தகாயம் வாயில் நுரைவந்து மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்த பெண்: உடலை கைப்பற்றி பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு உடன் கூராய்விற்கு அனுப்பி சிசிடிவி கேமரா பதிவுகளை வைத்து திருப்பாலைவனம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திருவள்ளூர் மாவட்டம் பழவேற்காட்டில் சுமார் ஆயிரக்கணக்கான மக்கள் நடமாடும் லைட் ஹவுஸ், பழவேற்காடு மேம்பாலம அருகில் அமைந்த பழவேற்காடு அரசு மருத்துவமனைக்கு எதிரில் சுமார் 45 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் ரத்த காயங்களுடன் வாயில் நுரை தள்ளிய நிலையில் இறந்து கிடந்துள்ளார். எந்நேரமும் ஆள் நடமாட்டம் உள்ள மாலை நேரத்தில் பெண் ஒருவர் சடலமாக கிடந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் இதுகுறித்து திருப்பாலைவனம் காவல்துறையினருக்கு அளிக்கப்பட்ட தகவலின் அடிப்படையில் காவல்துறையினர் உடலை மீட்டு பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வுக்கு அனுப்பி விசாரணை நடத்தி வருகின்றனர்.
அந்தப் பெண் இறந்த கிடந்த பகுதிகளில் உள்ள சிசிடிவி கேமராவை கொண்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இறந்த கிடந்த அந்தப் பெண் யார் எங்கிருந்து வந்தார் எந்த ஊரைச் சேர்ந்தவர் என்ற விவரங்கள் ஏதும் தெரியாத நிலையில் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.