திருவள்ளூர் மாவட்டம் பஞ்செட்டி ஊராட்சியில் அமைந்த தச்சூர் ஏரி மற்றும் குடியிருப்புகளை ஒட்டி அமைந்துள்ள ஜம்போ பேக்
பிளாஸ்டிக் பைகள் தயாரிக்கும் தனியார் நிறுவனம் அங்குள்ள கழிவுகளை ஒன்பது குழாய்கள் வைத்து அதை சுத்திகரிப்பு செய்யாமல் பைப்புகள் வழியாக வெளியேற்றி ஏரியில் விடுவதால் ஏரி ஏரியில் நீரும் நிலத்தடி நீரும் மாசடைந்து விவசாயத்திற்கு பாசனத்திற்கும் பயன்படாத வகையில் துர்நாற்றம் வீசிவருகிறது.
நிலத்தடி நீர் பாதிக்கப்படுவதுடன் பொதுமக்களுக்கு நோய் பரவி பாதிப்பு ஏற்பட கழிவுநீர் ஏரியில் கலப்பதை தடுக்க பொதுப்பணி துறை மற்றும் பொன்னேரி வட்டாட்சியர் முதல் மாவட்ட ஆட்சியர் வரை பலமுறை மனு அளித்தும் நடவடிக்கை எடுக்காததால் பாதிக்கப்பட்ட கிராம மக்கள் ஏரியில் அமைக்கப்பட்டுள்ள கழிவுநீர் குழாய்களை அவர்களே கோணி பைகளை கொண்டு அடைத்து இனி கழிவுநீரை வெளியேற்றக் கூடாது என தங்களது எதிர்ப்பை தெரிவித்ததுடன் சுற்றுச்சூழல் மற்றும் மாசுக்காட்டு கட்டுப்பாட்டுவாரிய அதிகாரிகள் உரிய ஆய்வு மேற்கொண்டு சுகாதார சீர்கேடு விளைவிக்கும் தனியார் நிறுவனத்தின் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும் கழிவு நீரை பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் முறையாக அகற்ற நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும் கிராம மக்கள் கோரிக்கை வைத்தனர்.